முடிவின் எல்லை நோக்கிய உண்மையின் பயணம்

புதன்

image1

தோற்றத்தில் கிட்டத்தட்ட பூமியின் நிலவை ஒத்தது புதன். இது வெட்டவெளியுடன் கூடிய பல பெரும்பள்ளங்களைக் (craters) கொண்டு விளங்குகிறது. புவிநிலவைப் போலவே புதனும் வளிமண்டலம் அற்று உள்ளது. ஆனால், புவிநிலவைப் போலன்றி, புதனுக்கு இரும்பாலான பெரிய உள்ளகம் உள்ளது. இதன் காரணமாக ஓரளவு காந்தப்புலமும் புதனுக்கு உண்டு.  

வெள்ளி

image2

வெள்ளிக்கோள் ஓர் திண்மக்கோளாகும். இங்கு கார்பன் சுழற்சி நடைபெறாமையால் பாறைகளோ தரைப்பரப்பு மேடுபள்ளங்களோ உருவாகவில்லை.  வெள்ளியின் தரைப்பகுதி வறண்ட பாலைவனமாக, அவ்வப்போதைய எரிமலை வெடிப்புகளால் புதிப்பிக்கப்பட்ட வண்ணம், உள்ளது. வெள்ளியின் மேற்பரப்பில் 80 சதவீதம் சமவெளியாய் உள்ளது. அதில் 10 சதவீதம் மென்மையான லோபடே சமவெளியும் 70 சதவீதம் மென்மையான,​​எரிமலை சமவெளியும் அடக்கம். இதில் வடதுருவத்தில் ஒரு கண்டமும் வெள்ளியின் நிலநடுக்கோட்டிற்கு சற்று தெற்கில் ஒரு கண்டமும் அமையப் பெற்றுள்ளது. 

செவ்வாய்

image3

செவ்வாய், சிலிக்கன், ஆக்சிசன், உலோகங்கள், இன்னும் பிற பாறைகளை உருவாக்கும் தனிமங்களைக் கொண்ட கனிமங்களாலான ஒரு புவிசார் கோள்.  செவ்வாயில் தெரியும் நிலத்தோற்றங்கள், ஒரு காலத்தில் அதன் மேற்பரப்பில் நீர்ம நீர் இருந்திருக்கக்கூடும் என்பதைக் காட்டுகின்றன. வெளிப்போக்குக் கால்வாய்கள் என அறியப்பட்ட பாரிய நீள்வடிவ நீரரிப்பு நிலங்கள், சுமார் 25 இடங்களில் செவ்வாய் மேற்பரப்புக்குக் குறுக்கே வெட்டிச் செல்கின்றன. 

2020-இன் பிற்பகுதியில் எதிர்பாருங்கள்.